Skip to content
Value for Money Value for Money
Great Quality Great Quality
Seamless Support Seamless Support

latest arrival drops in

Cart

Your cart is empty

இலங்கையின் சுதந்திர தினம்

காலத்தோடு பின்னியமைந்த பாரம்பரியம்: இலங்கையின் நெசவுத்  தொழில் மரபு
உலகின் முக்கியமான தொழில்களுள் ஒன்றான துணி மற்றும் நெசவுத்  தொழில், நூற்றாண்டுகளாக வளர்ச்சி பெற்று, இன்று செயற்கை நுண்ணறிவின் ஆதரவுடன் புதிய உயரங்களை அடைந்துள்ளது. ஆனால், இவை தோன்றும் முன்னரே, இலங்கை தனது செழித்த நெசவுப் பாரம்பரியத்தை உருவாக்கி, அதன் வேர்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பதித்துவிட்டது.

மஹாவம்சம் போன்ற வரலாற்று ஆதாரங்கள், இலங்கையின் உடைகளின் மரபு விஜயநகர காலத்துக்கு முன்னரே தொடங்கியிருப்பதை உறுதி செய்கின்றன. இளவரசர் விஜயன் மற்றும் அவருடன் வந்த 700 பேரும் தம்பபண்ணியில் கரையேறிய போது, குவேனி பருத்தி நெய்து கொண்டிருந்தார். இது இலங்கையில் பருத்தி நூல் நூற்றல் மற்றும் நெசவுத் தொழில் ஆதிமுதலே நிலவியதற்கான ஒரு உறுதியான சான்றாகும். இந்த பாரம்பரியம், தொழிலாகவும் ஒரு கலை வடிவமாகவும் 2,500 ஆண்டுகளாக ஒடுங்காமல் நகர்ந்துவருகிறது.

இந்நூற்பயிற்சி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்த மகான்களுள், மன்னர் காசியப்பன் முன்னணியில் இருந்தார் . அவரது ஆட்சியில், கைதறித் தொழில் மிகுந்த உயர்வை கண்டது, இதற்கு சான்றாக இன்றும் சிகிரியா கோட்டைச்சுவர் ஓவியங்கள் பறைசாற்றுகின்றன . அவற்றில், மேல் அங்கி  மற்றும் கீழ் அங்கி  என ஆடைகளின் தனித்தன்மை மிகுந்த அழகுடன் காட்சியளிக்கின்றன இவ்வியல்புகளே இலங்கையின் நெசவு தொழில் மேன்மையை வெளிப்படுத்துகின்றன—

சுதந்திர இலங்கையின் 77வது ஆண்டு விழாவினை கொண்டாடும் இந்நாளில், தொன்மயான தனது மரபுகளைத் தாண்டி, உலகளாவிய மாற்றங்களுடன் தொடரும் இலங்கையின் சிறந்த ஆடை நிறுவனங்களை நினைவுகூருவோம்.

நம் தேசத்தை விடுவித்த வீரர்களுக்கு தலை வணங்கி, உலகையே ஈர்த்த எமது பாரம்பரியத்தைப் பெருமையுடன் கொண்டாடுவோம்!